தேசிய செய்திகள்

தமிழக டி.ஜி.பி.க்கு பிரதமர் மோடி பாராட்டு + "||" + Prime Minister Modi praises Tamil Nadu DGP

தமிழக டி.ஜி.பி.க்கு பிரதமர் மோடி பாராட்டு

தமிழக டி.ஜி.பி.க்கு பிரதமர் மோடி பாராட்டு
தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.


லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சமீபத்தில் அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் மாநாடு நடந்தது.  இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் பிரதமர் மோடி தனியாக பேசியதோடு புகைப்படமும் எடுத்து கொண்டார்.

இது குறித்து உள்துறை அதிகாரிகள் கூறும்போது, நீங்கள் சைக்கிளில் மகாபலிபுரம் சென்று வருகிறீர்களே. அதை சமூக வலைதளங்களில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள் என பிரதமர் மோடி, சைலேந்திர பாபுவிடம் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில், பிரதமரிடம் 15 பக்க அறிக்கையை சைலேந்திர பாபு அளித்துள்ளார்.  இந்த அறிக்கையை முதல்-அமைச்சர் பார்த்து ஒப்புதல் அளித்த பின்தான் மோடியிடம் தமிழக அரசின் சார்பாக அளித்துள்ளார். தமிழகத்தில் கலவரம், மதமாற்றம், சிலை திருட்டு, சமூக வலைதளங்களின் போக்கு, சைபர் குற்றங்கள், சிறுமியர் மீது பாலியல் குற்றங்கள் என பல விஷயங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் ரசாயன ஆலையில் விஷவாயு தாக்கி சீனர் உயிரிழப்பு; பலர் மயக்கம்
பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி சீன நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்து உள்ளார்.
2. வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3. காஷ்மீர் என்கவுண்ட்டர்: போலீஸ்காரர் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் போலீஸ்காரர் வீரமரணம் அடைந்துள்ளார். பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
4. பிரான்சில் 3.5 லட்சம் கொரோனா; சுகாதார மந்திரி அதிர்ச்சி
பிரான்சில் முதன்முறையாக 3.5 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவு என சுகாதார மந்திரி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
5. ஒமைக்ரான்லாம் என்ன... அடுத்து ஒன்று வர இருக்கு; இங்கிலாந்து விஞ்ஞானி அச்சுறுத்தல்
உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவும் ஒமைக்ரானை விட அடுத்து வரும் புதிய வகை அதிக கடுமையாக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.