தேசிய செய்திகள்

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் + "||" + Omicron Scare: Centre Writes To States And UTs To Enforce Intensive Containment Measures

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி,

சீனாவின் உகானில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா இன்னும் உலகை விட்டு ஒழியவில்லை. ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரசில் பலவித உருமாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகையில் உருமாறிய கொரோனா தொற்றும் மனித இனத்தை தாக்கி வருகின்றன.

இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் தடுப்பூசி பணிகளும் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு உருமாறிய கொரானா வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது. போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் என பல நாடுகளில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. முந்தைய திரிபுகளை விட வீரியம் மிகுந்த வைரசாக கருதப்படும் இந்த தொற்று உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய வைரசால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உலக நாடுகள், பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நாடுகளுக்கு பயணத்தடைகளை விதித்து உள்ளன. மேலும் தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளன. 

மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸின் உருமாற்றமான ஓமைக்ரான் வைரஸ் குறித்து உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பரிசோதனை தீவிரப்படுத்தி, கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முப்பரிமாண ஒளிவடிவிலான நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
2. நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
3. இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை - பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
4. பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்..!! - மத்திய பிரதேச மந்திரி கருத்து
காங்கிரசின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட பிறந்த கடவுளின் அவதாரம், மோடி என்று மத்திய பிரதேச மந்திரி தெரிவித்துள்ளார்.
5. டெலிபிராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மோடியை கலாய்த்த ராகுல் காந்தி
'டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்க முடியவில்லை' என பிரதமரின் உரையை ராகுல் காந்தி கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.