காஷ்மீரில் அமைதி திரும்பவேண்டுமா? சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவாருங்கள் - பரூக் அப்துல்லா


காஷ்மீரில் அமைதி திரும்பவேண்டுமா? சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவாருங்கள் - பரூக் அப்துல்லா
x
தினத்தந்தி 30 Nov 2021 7:42 AM GMT (Updated: 30 Nov 2021 7:42 AM GMT)

காஷ்மீரில் அமைதி திரும்பவேண்டுமானால் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். 

அப்போது, அவரிடம் காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாகவும், காஷ்மீர் நிலவரம் தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, காஷ்மீரில் அமைதி திரும்பவேண்டுமானால் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ மீண்டும் கொண்டுவரவேண்டும்’ என்றார்.

முன்னதாக, பரூக் அப்துல்லாவின் மகனும், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான உமர் அப்துல்லா காஷ்மீரின் கிஷ்ட்வர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், எங்கள் ஆட்சி காலத்தில் பயங்கரவாதம் துடைத்து எறியப்பட்ட இடங்களில் மீண்டும் பயங்கரவாதம் வளருகிறது. இந்த பயங்கரவாதிகள் வெளியில் இருந்து வரவில்லை. 

கோபம் மற்றும் பிற காரணங்களால் ஆயுதங்களை எடுக்க தயாரக உள்ள காஷ்மீர் இளைஞர்களே பயங்கரவாதிகளாக வருகின்றனர்’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Next Story