தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீர் சந்திப்பு + "||" + Former Prime Minister Deve Gowda has a surprise meeting with Prime Minister Modi

பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீரென சந்தித்து பேசினார்.


பெங்களூரு,

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முன்னாள் பிரதமரும் மாநிலங்களவை உறுப்பினருமான தேவகவுடா, பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.

அவரை சந்திக்க நேற்று பிரதமர் அலுவலகம் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், இடையில் பிரதமர் மோடியை சந்திக்க தேவகவுடா வந்தார். வழக்கமாக யார் சந்திக்க வந்தாலும் பிரதமர் மோடி அவர்களை அறையில் அமர வைத்து பேசுவது வழக்கம்.

ஆனால் தேவகவுடா வருவதற்கு முன் வாசலில் காத்திருந்த மோடி, அவரை கை கூப்பி வணங்கி மிகவும் மரியாதை மற்றும் கவுரவத்துடன் கையை பிடித்து அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தினார். அவரிடம் உடல் நலம் விசாரித்தார். இருவரும் தனிமையில் பேசினர்.

தேவகவுடாவை சந்தித்து பேசிய தருணம் எனது வாழ்நாளில் மறக்க முடியாதது என்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், படத்துடன் வெளியிட்டு பதிவு செய்துள்ளார். இந்த சந்திப்பின்போது, கர்நாடக மாநில அரசியல் சூழ்நிலை, மேலவை தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை பற்றி பேசப்பட்டது என்று கூறப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. கிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்புகிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்து, சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
2. விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு... காரணம் தெரியுமா?
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
3. புதின்-ஜின்பிங் சந்திப்பு: காணொலி காட்சி வாயிலாக நடந்தது
ரஷிய அதிபர் புதினுடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. கருத்து சுதந்திர பிரச்சினை: கவர்னருடன், அண்ணாமலை சந்திப்பு
தமிழக கவர்னரை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
5. வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் அடங்கிய குழு அக்கட்சி தலைவர் தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.