புதுச்சேரியில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


புதுச்சேரியில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 1 Dec 2021 5:23 AM IST (Updated: 1 Dec 2021 5:23 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.



புதுச்சேரி,

புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2,311 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் புதுச்சேரி-9, காரைக்கால்-6, ஏனாம்-2, மாகி-14 என மொத்தம் 31 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

நேற்று முன்தினம் கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு 1,872 ஆக நீடிக்கிறது. மாநிலத்தில் இதுவரை 1,28,924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  மருத்துவமனைகளில் 57 பேர், வீடுகளில் 227 பேர் என 284 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

43 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி நேற்று வீடு திரும்பினர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,768 ஆக அதிகரித்தது.  இதுவரை மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை 7,57,887 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 4,68,351 பேரும் போட்டு கொண்டுள்ளனர்.


Next Story