திருட்டு மின்சாரத்துக்கு இணைப்பு கொடுக்க மரம் ஏறிய வாலிபர் உடல் கருகி பலி...!


திருட்டு மின்சாரத்துக்கு இணைப்பு கொடுக்க மரம் ஏறிய வாலிபர் உடல் கருகி பலி...!
x
தினத்தந்தி 1 Dec 2021 11:11 AM IST (Updated: 1 Dec 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் திருட முயன்ற போது வாலிபர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் தாகூர்புகூர் பகுதியில் உள்ள உயர் மின்அழுத்த மின்சாரத்தை திருடுவதற்காக  ஒரு  வாலிபர் மின் கம்பிகளை மரத்தில் ஏறி இணைக்க முயற்சி செய்துள்ளார்.அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். 

மின்சாரம் பாய்ந்து அவர் உயிருடன் எரிவதை கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர்ன் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Next Story