புனே வந்த நைஜீரியாவை சேர்ந்த தாய், மகனுக்கு ஒமைக்ரான்?
ஒமைக்ரான் பரிசோதனைக்காக அவர்களின் சளிமாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
புனே,
ஒமைக்ரான் அச்சுறுத்தலை அடுத்து புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதிக்கு நைஜீரியாவில் இருந்து வந்த தாய், மகனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் ஒமைக்ரான் பரிசோதனைக்காக அவர்களின் சளிமாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேயில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பயணி ஒருவருக்கு பரிசோதனை மூலம் கொரோனா கண்டறியப்பட்டதால் அவரை தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story