அணைகள் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்


அணைகள் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 2 Dec 2021 9:10 PM IST (Updated: 2 Dec 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

அணைகள் பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 29) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

இன்றைய கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா 2019 குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவை நிறைவேற்ற தி.மு.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் அணைகள் பாதுகாப்பு மசோதா 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் கடந்த 2019-ம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரு அவையிலும் மசோதா நிறைவேறியதை அடுத்து அணைகள் பாதுகாப்பு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story