3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை - மராட்டிய அரசு உத்தரவு


3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை - மராட்டிய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 3 Dec 2021 1:41 AM IST (Updated: 3 Dec 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயப்படுத்தப்பட்டது. மராட்டிய அரசின் கட்டுப்பாடுகளுக்கு கடந்த சில நாட்களுக்கு மத்திய அரசு அதிருப்தி தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக மத்திய சுகாதார துறை, மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. இந்தநிலையில் வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தப்படுவதில் சில திருத்தங்களை மராட்டிய அரசு மேற்கொண்டு உள்ளது.

இதன்படி ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் அதிகம் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, போட்ஸ்வானா ஆகிய 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் 7 நாட்களுக்கு தனிமை மையத்தில் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு பிறகு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தால் அவர் அடுத்த 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். தொற்று உறுதியானால் பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார். இந்த தகவலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

Next Story