அயோத்திக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு


அயோத்திக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 2:50 AM IST (Updated: 3 Dec 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

அயோத்திக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநில போலீசாரின் அவசர எண்ணான ‘112’-க்கு நேற்று அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், அயோத்தியில் தொடர் குண்டுகள் வெடிக்கும் எனவும், ராமர் கோவிலையும் தாக்குவோம் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே அந்த அழைப்பு குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து வந்திருப்பதாகவும், மிரட்டல் விடுத்த நபரையும் அடையாளம் கண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story