பலத்த காற்று, மழையால் குஜராத் கடலில் படகுகள் கவிழ்ந்தன; மீனவர்களை காணவில்லை
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, கடந்த ஓரிரு நாட்களாக குஜராத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஆமதாபாத்,
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, கடந்த ஓரிரு நாட்களாக குஜராத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் கடலோரத்தில் படகு துறையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கடலில் கவிழ்ந்தன. அதுபோல், கடலில் மீன் பிடிக்க சென்ற சில படகுகளும் கடல் கொந்தளிப்பால் கவிழ்ந்தன. மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை கடலோர காவல் படையும், போலீசாரும் இணைந்து தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story