டெல்லி காற்று மாசு; 5 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு - மத்திய அரசு தகவல்


டெல்லி காற்று மாசு; 5 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 11:05 AM IST (Updated: 3 Dec 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, 24 மணி நேரத்தில் காற்று மாசை குறைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கெடு விதித்தனர். 

இதையடுத்து டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது தவிர 17 பறக்கும் படைகள் கொண்ட கண்காணிப்பு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக பறக்கும் படைகள் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story