கேரளாவில் மேலும் 4,995- பேருக்கு கொரோனா


கேரளாவில் மேலும் 4,995- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Dec 2021 7:22 PM IST (Updated: 3 Dec 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,995- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,995- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 4,463- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 44,637- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50,70,497-  ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 62,343- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாவட்டவாரியாக அதிகபட்சமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களில் முறையே 790,770,578- என தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

Next Story