ராகுல் காந்தி உடன் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது மாநில அரசியல் சூழல்கள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாகாங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். காங்கிரசில் இணைந்த உடனேயே, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார் உடன் நவ்ஜோத் சிங் சித்து இருந்தார்.
Related Tags :
Next Story