இன்று முழு சூரிய கிரகணம்: இந்திய நேரப்படி எப்போது?


இன்று முழு சூரிய கிரகணம்:  இந்திய நேரப்படி எப்போது?
x
தினத்தந்தி 4 Dec 2021 1:55 AM IST (Updated: 4 Dec 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டின் 4-வது மற்றும் கடைசி முழு சூரிய கிரகணம் இன்று (சனிக்கிழமை) நிகழ்கிறது.

ஐதராபாத், 

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் கடக்கும்போது சூரியன் மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 10.59 மணி முதல் பிற்பகல் 3.07 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

ஆனால் இதை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. அண்டார்டிகா, தென்ஆப்பிரிக்கா, தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல், தென்னிந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து பார்க்கலாம் என்று இந்திய கோளரங்க இயக்குனர் ரகுநந்தன் குமார் தெரிவித்தார்.

இந்தியாவில் தெரிந்த கடைசி சூரிய கிரகணம் கடந்த ஆண்டு ஜூன் 21-ந் தேதி ஏற்பட்டது. இனிமேல், அடுத்த ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி ஏற்படும் சூரிய கிரகணம், இந்தியாவில் தெரியும்.

Next Story