இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 10:34 AM IST (Updated: 4 Dec 2021 10:34 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது நேற்றைய பாதிப்பான 9 ஆயிரத்து 216 (நேற்று முன் தினம் 9,765) -ஐ விட சற்று குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 24 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8 ஆயிரத்து 190 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 53 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 415 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.

Next Story