காங்கிரசுக்கு செல்வாக்கு இல்லை : அகிலேஷ் யாதவ்
மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான மாற்று அரசியல் முன்னணியில் சேரத் தயாராக இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
லக்னோ,
மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான மாற்று அரசியல் முன்னணியில் சேரத் தயாராக இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது; - “ உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விடுவதற்கான தளத்தை உருவாக்குவதில் மம்தா பானர்ஜி மும்முரமாக இருக்கிறார்.
மேற்குவங்க தேர்தலில் பாஜகவை வீழ்த்திய மம்தா பானர்ஜியால் உத்தரப்பிரதேசத்திலும் ஆளும் கட்சி ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும். மம்தா பானர்ஜியை நான் வரவேற்கிறேன். அவர் வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய விதம் அபரிமிதமானது. அதேபோன்று உத்தரபிரதேச மக்கள் பாஜகவை வீழ்த்துவார்கள். காங்கிரசுக்கு செல்வாக்கு இல்லை. உத்தரப் பிரதேச மக்கள் காங்கிரஸை அங்கீகரிக்க மாட்டார்கள். வரவிருக்கும் தேர்தலில் காங்கிரசுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும்” என்றார்.
Related Tags :
Next Story