5 லட்சம் ஏ.கே. 203 துப்பாக்கிகள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்


5 லட்சம் ஏ.கே. 203 துப்பாக்கிகள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 5 Dec 2021 12:08 AM IST (Updated: 5 Dec 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

உத்தரப்பிரதேசத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பில் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதியில் இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியால்  5,000 கோடி மதிப்பில் 5,00,000 ஏகே 203 கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான  ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. 

திங்கள்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம், மோடி அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ரஷ்ய அரசாங்கத்துடன் கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, காலிபர் ஏகே-203 துப்பாக்கிகள், தற்போது பயன்படுத்தி வரும்  இன்சாஸ் துப்பாக்கிகளுக்குப் பதிலாக இருக்கும். பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, ஏகே-203 தாக்குதல் துப்பாக்கிகள் 300 மீட்டர் திறன் கொண்டவை மற்றும் எடை குறைந்தவை. இந்த துப்பாக்கிகள் ராணுவ வீரர்களின் போர் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story