கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கேட்டு காங்கிரசின் ஆன்லைன் பிரசாரம்
இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆன்லைன் பிரசாரம் தொடங்கி உள்ளது.
ரூ.4 லட்சம் இழப்பீடு
இந்தியாவில் 4½ லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என ேகாரி வருகிறது. இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் அந்த கட்சி எழுப்ப முயன்றது.
அரசை எழுப்புவோம்
இந்த கோரிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் தற்ேபாது ஆன்லைன் பிரசாரம் ஒன்றை அந்த கட்சி நேற்று தொடங்கியது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
‘மக்களின் வலி, இழப்பு என்று வரும்போது, அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களை எழுப்புவோம்’ என அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
பிரசாரத்தின் நோக்கம்
நாடு முழுவதும் கொரோனாவில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிடவும், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசை வலியுறுத்துவதே இந்த பிரசாரத்தின் நோக்கம் என காங்கிரஸ் கூறியுள்ளது.
கொரோனா தொற்றை நிர்வகிப்பதில் அரசின் தோல்விகளை மறைப்பதற்காக, மிகவும் சாதுரியமாக ெகாரோனா இறப்புகளின் எண்ணிக்கையை அரசு குறைத்து வெளியிடுவதாகவும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
உதவும் எண்ணம் இல்லை
உயிரிழப்புகள் குறித்த சரியான தரவு அரசிடம் இல்லையென்றால், முழு நாடும் அதை அரசுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ள கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் ெகரா, ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் எண்ணம் அரசிடம் இல்லை என்பதே உண்மையான பிரச்சினை எனவும் தெரிவித்தார்.
‘கொரோனா நீதிக்காக பேசுங்கள்’ என்ற ஹாஷ்டாக் மூலம் தொடங்கியிருக்கும் இந்த பிரசாரத்தில் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்களும் மேற்படி கோரிக்கைைய வலியுறுத்தும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story