உத்தரகாண்ட் 5 வருடங்களில் 3 முதல்-மந்திரிகளை கண்டுள்ளது, வளர்ச்சி தான் இல்லை - ப.சிதம்பரம்


உத்தரகாண்ட் 5 வருடங்களில் 3 முதல்-மந்திரிகளை கண்டுள்ளது, வளர்ச்சி தான் இல்லை - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 5 Dec 2021 1:21 AM IST (Updated: 5 Dec 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

ப.சிதம்பரம், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை சாடி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை சாடி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “சாயல் என்பது முகஸ்துதியின் மற்றொரு வடிவம். இதில் பா.ஜ.க.வை ஆம் ஆத்மி அதிகமாக பின்பற்றுகிறது. காலப்போக்கில் பா.ஜ.க.வின் நகல் வடிவம் (குளோன்) போலவே ஆம் ஆத்மி ஆகி விடும்.” என கூறி உள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி ரூ.15 ஆயிரத்து 728 கோடி வளர்ச்சி திட்டங்கள் அறிவித்தது பற்றியும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் “உத்தரகாண்ட் 5 வருடங்களில் 3 முதல்-மந்திரிகளை கண்டுள்ளது. வளர்ச்சிதான் இல்லை. ஆனால் வளர்ச்சி இன்று (நேற்று) தொடங்கி விடும், அதாவது தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக. அங்கு எதுவும் இருக்காது. ஆனால் அடிக்கல் இருக்கும், அதை நாட்டியதற்கான கல்வெட்டு இருக்கும்” என சாடி உள்ளார்.

Next Story