“விவசாய சகோதரர்கள் தங்கள் பேராட்டத்தை கைவிட வேண்டும்” - வேளாண் மந்திரி வலியுறுத்தல்


“விவசாய சகோதரர்கள் தங்கள் பேராட்டத்தை கைவிட வேண்டும்” - வேளாண் மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2021 8:33 AM IST (Updated: 5 Dec 2021 8:33 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் வீடு திரும்பி வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வேளாண் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.

குவாலியர்,

விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து, வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. எனினும் தங்கள் போராட்டத்தை கைவிடாத விவசாயிகள், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கையை ஏற்று, அந்த சட்டங்களை ஏற்கனவே மத்திய அரசு வாபஸ் பெற்று விட்டது. அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக குழுவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிட்டது என நான் கருதுகிறேன். எனவே விவசாய சகோதரர்கள் தங்கள் பேராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பி வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story