தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு + "||" + COVID19 | India reports 8,895 new cases, 2,796 deaths in the last 24 hours, active caseload at 99,155.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு இறங்குமுகம் கண்டு வருகிறது. நேற்று 8,603 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 948 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,796  பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பீகாரில் நேற்று 2,426 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,04,18,707 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்த்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,61,83,065 ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் - சுகாதார துறை மந்திரி
கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்று சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
2. மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.
3. இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
4. பிரான்சில் ஒரேநாளில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு...!!
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,01,635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 94,326 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.