மிரட்டும் ஜவாத் புயல் - ஆபத்தை உணராமல் கடற்கரையில் குவிந்த மக்கள்


மிரட்டும் ஜவாத் புயல் - ஆபத்தை உணராமல் கடற்கரையில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 5 Dec 2021 1:24 PM IST (Updated: 5 Dec 2021 1:24 PM IST)
t-max-icont-min-icon

ஜவாத் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.

கொல்கத்தா,

ஜவாத் புயலால் மேற்கு வங்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பகிறது. இந்நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனர். அவர்களை பேரிடர் மீட்புப் படையினர் எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு அறிறுத்தினர். நண்பகலில் திகா நகருக்கு அருகே புயல் கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் திகா கடற்கரை, சங்கர்பூர் கடற்கரை ஆகிய பகுதிகளில் கரை திரும்பினர். புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசித்து வந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 19 தேசிய மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

Next Story