கேரளாவில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை - கல்வித்துறை மந்திரி அறிக்கை
கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்சமயம் நாட்டிலேயே கேரள மாநிலத்தில் தான் தினமும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கேரள அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை திவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கேரளாவில் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து வந்தனர். இதனால் 47 லட்சம் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்ற நிலையில், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டது.
இந்த நிலையில் கேரள கல்வித்துறை மந்திரி வி. சிவன் குட்டி வெளியிட்டுள்ள அறிகையில், கேரளாவில் இதுவரை 1,495 ஆசிரியர்கள் மற்றும் 212 அரசுப்பள்ளி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்கள் வாரம் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொண்ட முடிவுகளை வழங்க வேண்டும்.
இதற்கு மேலும் சில ஆசிரியர்கள் தொடர்ந்து தடுப்பூசி போடாமல் இருந்தால், அவர்கள் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.” என்று மந்திரி வி. சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story