இந்தியாவில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர்
இந்தியாவில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற பெருமையை சிவபால் பெற்றுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் கட்டிபள்ளி சிவலால் (வயது 42). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிவலாலுக்கு சாலைகளில் மற்றவர்களை போல வாகனங்களை ஓட்டிச்செல்ல ஆசை இருந்தது. ஆனால், அவரது உயரம் 3 அடி என்பதால் காரில் அமர்ந்து அவரால் சாதாரண மனிதர்கள் போல ஓட்ட முடியாது.
இதனால், பலரும் அவருக்கு டிரைவிங் கற்றுக்கொடுக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தனியார் டிரைவிங் ஸ்கூல் ஒன்றின் உதவியால் சிவலால் டிரைவிங் கற்று கொண்டு லைசென்ஸ் டெஸ்டில் தேர்வாகியுள்ளார். இதனையடுத்து நாட்டிலேயே வாகன ஓட்டிகளுக்கான லைசன்ஸ் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற பெருமையை சிவலால் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பகிர்ந்து கொண்ட சிவலால், 'மூன்று அடி உயரமுள்ள நான், இன்று நாட்டிலேயே முதல் முறையாக லைசன்ஸ் பெற்றுள்ளேன். அதன் அடிப்படையில் தெலுங்கு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா சாதனையளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன்.
இப்போது எனது மனைவிக்கும் கார் ஓட்ட சொல்லி கொடுக்கிறேன். ஐதராபாத்தை சேர்ந்த கார் வடிவமைப்பாளர் எனக்கு ஏற்றார்போல் காரில் சில மாற்றங்களை செய்து கொடுத்துள்ளார். வாகனம் ஓட்ட கற்று கொள்ளும்போது நிறைய சிரமங்கள்பட்டேன். அமெரிக்காவில் மூன்று அடி உயரமுள்ள நபர் வாகனம் ஓட்டும் வீடியோ எனக்கு உந்துதலாக அமைந்தது. அவரை போலவே நானும் டிரைவிங் கற்றுக்கொணடேன். நம்பிக்கை இல்லை என்றால் என்னால் டிரைவிங் கற்றிருக்க முடியாது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறுகிறார்.
Related Tags :
Next Story