திருப்பதி மலைப்பாதைகளில் கேரள நிபுணர்கள் குழு ஆய்வு


திருப்பதி மலைப்பாதைகளில் கேரள நிபுணர்கள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 6 Dec 2021 1:36 AM IST (Updated: 6 Dec 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

அண்மையில் பெய்த மழையால் திருப்பதி மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

திருமலை, 

அண்மையில் பெய்த மழையால் திருப்பதி மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த இடங்களை நேற்று கேரளாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், நிலச்சரிவைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளுக்காகவும் நிபுணர்கள் குழு ஆய்வு செய்தனர். எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் அதுபோன்ற பகுதிகளை மறுசீரமைக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு விரிவான அறிக்கையை அளிப்பார்கள்.

ஆய்வின்போது நிபுணர் குழுவை சேர்ந்த பேராசிரியர்கள் மனிஷா, நிர்மலாவாசுதேவன், சுதேஷ் வித்வான், தேவஸ்தான என்ஜினீயர்கள் சுரேந்திரநாத் ரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story