உத்தரபிரதேச தேர்தலுக்கு அப்துல் கலாம் புகைப்படத்தை பயன்படுத்தும் சமாஜ்வாடி
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் ஏற்கனவே பணிகளை தொடங்கி விட்டன.தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்த கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன. அந்தவகையில் ‘ஏவுகணை மனிதன்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படத்தை சமாஜ்வாடி கட்சி தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறது.மாநிலம் முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டு வரும் சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவின் வாகனத்தில் படேல், அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்களின் படங்களுடன், அப்துல் கலாமின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.இதற்கு பா.ஜனதா கிண்டல் செய்துள்ளது. முகமது அலி ஜின்னாவுக்கு பதிலாக அப்துல் கலாமின் புகைப்படம் பயன்படுத்தி இருப்பதன் மூலம் அகிலேஷ் யாதவுக்கு ஞானம் பிறந்துள்ளதாக தெரிகிறது என மாநில மந்திரி மொசின் ரசா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story