கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி பெங்களூருவில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்?
நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் அபாயகரமான ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
பெங்களூரு,
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக பெங்களூருவில் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் அபாயகரமான ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. பெங்களூருவில் ஒரு டாக்டர் உள்பட 2 பேருக்கு அந்த பாதிப்பு உறுதியானது. அந்த டாக்டருடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு வரிசை பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே பெங்களூருவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இங்கு தினமும் 160 பேருக்கு பாதிப்பு என்ற அளவில் பதிவாகி வந்த நிலையில் அது 200-ஐ தாண்டியுள்ளது. தலைநகரில் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதனால் பெங்களூருவில் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை செய்யலாமா? என்று மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. விரைவில் இதுகுறித்து அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்யும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு மாநகராட்சி பரிந்துரை செய்தால், பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story