அம்பேத்கர் நினைவு தினம் - ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி,
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் அங்கு அலங்கரித்துவைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கரின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story