புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு!
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஏற்கனவே 9, 10, 11, 12ம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 8ந் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டன. தொடர் மழையின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. அதையடுத்து பள்ளி திறப்பதற்கான அறிவிப்பினை அமைச்சர் நமச்சிவாயம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
அதன்படி புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. வாரத்தில் 6 நாட்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு அரைநாள் இயங்கி வந்த நிலையில், இன்று முதல் முழுநேர வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல்வெப்பநிலை பரிசோதனை கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிய பின்னரே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் வீட்டிற்குள் முடங்கி கிடந்த குழந்தைகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதுவரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்த நிலையில் தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற இருப்பதை கண்டு பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story