நாகலாந்து விவகாரம் அமித் ஷா விளக்கம்... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


நாகலாந்து விவகாரம் அமித் ஷா விளக்கம்... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 4:44 PM IST (Updated: 6 Dec 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

நாகலாந்து விவகாரத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவல்படியே அங்கு துப்பாக்கி சூடு நடத்தபட்டது என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி

நாகலாந்து  துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில்  மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா  விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகாலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 21 கமாண்டோக்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியில் பதுங்கியிருந்தனர். ஒரு வாகனம் அங்கு வந்தது, அதை நிறுத்த சைகை காட்டப்பட்டது ஆனால் அந்த வாகனம் தப்பி ஓட முயன்றது. தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தற்போது அங்கு பதற்றமாக உள்ளது, ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று நாகாலாந்து டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தீவிரவாதத்தை மனதில் கொண்டு விசாரணை மாநில குற்றப்பிரிவு போலீசிடம்  ஒப்படைக்கப்பட்டது என கூறினார்.

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்த மத்திய மந்திரி அமித்ஷாவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.  காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Next Story