பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு


பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 12:59 PM GMT (Updated: 2021-12-06T18:29:13+05:30)

பிரதமர் மோடியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சந்தித்தார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலை டெல்லி வந்தார். அவர் அரசு விருந்தினர்கள் தங்கும் மாளிகைக்கு வந்தார். அரசு மாளிகை வந்த விளாடிமிர் புதினை பிரதமர் மோடி வரவேற்றார்.

இதனை தொடர்ந்து இரு தலைவர்களும் இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Next Story