மராட்டியத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? மந்திரி ராஜேஷ் தோபே பதில்


மராட்டியத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? மந்திரி ராஜேஷ் தோபே பதில்
x
தினத்தந்தி 7 Dec 2021 3:37 AM IST (Updated: 7 Dec 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து மந்திரி ராஜேஷ் தோபே பதிலளித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் நேற்று வரை 10 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நோய் தொற்று பரவத்தொடங்கி உள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே பதிலளித்து கூறியதாவது:-

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் நீக்கப்பட்டால் மக்கள் மிகுந்த சிரமம் அடைவார்கள். எனினும் நாங்கள் சூழல் குறித்து கண்காணித்து வருகிறோம். மீண்டும் கட்டுபாடுகள் விதிக்கப்படுவது குறித்து மத்திய அரசு, மாநில கொரோனா தடுப்பு பணிக்குழுவின் வழிகாட்டுதலை பின்பற்றி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story