உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படும்- பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி
அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிகூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
கட்சி எம்.பி.க்கள் தவறாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் . இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது. ஒரு பிரச்சினையை சுட்டிகாட்டினால் குழந்தைகள் கூட அதை மீண்டும் செய்வதில்லை.
கட்சி எம்.பி.க்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம் என கூறினார்.
Related Tags :
Next Story