காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் உணர்கிறேன் - மெகபூபா முப்தி
காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் உணர்கிறேன் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மெகபூபா முப்தி பேசியதாவது, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் மக்கள் இந்திய அணிக்கும், இந்திய மக்கள் பாகிஸ்தான் அணிக்கும் ஆதரவாக கோஷம் எழுப்பியது எனக்கு நினைவிருக்கிறது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆனால், சில நாட்களுக்க்கு முன்னர் ஆக்ராவில் சில இளைஞர்கள் (காஷ்மீர் இளைஞர்கள்) இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
இந்த வழக்கில் இளைஞர்களுக்கு ஆதரவாக வாதாட ஒரு வழக்கறிஞர் கூட வரவில்லை. ஆகையால், காந்தியின் இந்தியா, கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் நான் உணருகிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story