மாணவர்களை மதம் மாற்றியதாக புகார் - பள்ளிக்கூட்டத்தை அடித்து நொறுக்கிய கும்பல்


மாணவர்களை மதம் மாற்றியதாக புகார் - பள்ளிக்கூட்டத்தை அடித்து நொறுக்கிய கும்பல்
x
தினத்தந்தி 7 Dec 2021 3:09 PM GMT (Updated: 7 Dec 2021 3:09 PM GMT)

மாணவர்களை மதம் மாற்றியதாக எழுந்த புகாரில் பள்ளிக்கூட்டத்தை கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோடா பகுதியில் புனித ஜோசப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் மதமாற்ற செயலில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்து மதத்தை சேர்ந்த மாணவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாக பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

சமீபத்தில் 8 மாணவர்களை பள்ளிக்கூட நிர்வாகம் வற்புறுத்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக இந்து மத அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்நிலையில், மாணவர்களை மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக புனித ஜோசப் பள்ளிக்கூடத்திற்கு எதிராக பஜ்ரங் தல், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. 

பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் போராட்டம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டவர்களில் சிலர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். பள்ளிக்கூடம் அருகே கும்பலாக திரண்ட போராட்டக்காரர்கள் கற்கல், கட்டைகளை வீசி பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தினர். இதில், பள்ளிக்கூடத்தின் ஜன்னல், கண்ணாடிகள் சேதமடைந்தன.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் பள்ளியில் தாக்குதல் நடத்திய கும்பலை விரட்டியடித்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story