'சிவப்பு தொப்பி' பாஜவுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' - மோடிக்கு அகிலேஷ் பதிலடி
சிவப்பு தொப்பு பாஜவுக்கு சிவப்பு எச்சரிக்கை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி, 8,603 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உரத்தொழிற்சாலை, 1,011 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி பேசுகையில், சிவப்பு தொப்பிகள் (சமாஜ்வாதி கட்சியின் அடையாளம்) அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற ஒற்றை எண்ணத்தில் உள்ளனர் என்பது ஒட்டுமொத்த உத்தரபிரதேசத்திற்கும் தெரியும். ஊழல், நில அபகரிப்பு, மாபியா கும்பலுக்கு விடுதலையளிக்க சிவப்பு தொப்பிகளுக்கு அதிகாரம் வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டவும், அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யவும் ’சிவப்பு தொப்பிகள்’ ஆட்சியமைக்க விரும்புகின்றன. ஆகையால், எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உத்தரபிரதேசத்தில் சிவப்பு தொப்பிகள் என்றால் சிவப்பு எச்சரிக்கை என்று அர்த்தம். அவர்கள் எப்போதும் எச்சரிகை மணிகள்’ என்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் கூறுகையில், சிவப்பு தொப்பி பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றும். ஆகையால், சிவப்பு தொப்பி பாஜகவுக்கு சிவப்பு எச்சரிக்கையே’ என்றார்.
Related Tags :
Next Story