நாடாளுமன்ற மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைப்பு


நாடாளுமன்ற மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 10:16 PM IST (Updated: 7 Dec 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ந்தேதி தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று மக்களவையும் நாளை காலை 11 மணிவரை ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story