ஒமைக்ரான் பரவல்: ஆபத்தான நாடுகள் பட்டியலில் தான்சானியா, கானா சேர்ப்பு..!
ஒமைக்ரான் பரவல் காரணமாக, ஆபத்தான நாடுகள் பட்டியலில் தான்சானியா, கானா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த வைரஸ் பரவி வருகிறது.
இந்தியாவில் ஆபத்தான நாடுகள் என அறியப்படுகிற இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்ஆப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் நாடுகளில் இருந்து வருகிற பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை நடத்தும் நடவடிக்கை நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் புதுவேகம் எடுத்துள்ள நிலையில், ஆபத்தான நாடுகளில் பட்டியலில் தான்சானியா, கானா ஆகிய 2 நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. தான்சானியா நாட்டில் இருந்து வந்த 2 பயணிகளுக்கு ஒமைக்ரான் உறுதியானதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய விமானத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story