முல்லைப்பெரியாறு: முழுநேர கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Dec 2021 9:54 PM GMT (Updated: 7 Dec 2021 9:54 PM GMT)

முல்லைப்பெரியாறு அணைக்கு முழுநேர கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி, 

கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டி்ல் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “முல்லைப்பெரியாறு அணையில் நீரை திறந்து விடுவதில் தமிழக அரசு விவேகமாக நடந்து கொள்ளவில்லை. அணையில் பாதுகாப்பு அளவு மட்டுமே நீரை தேக்கி வைக்க வேண்டும். அணையில் இருந்து முறையாக நீரை திறந்து விட வேண்டும்.

மேலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இரவு நேரத்தில் அதிகப்படியான நீரை திறந்து மக்களே அச்சமுற செய்வதை தடுக்க வேண்டும். இதற்காக கண்காணிப்பு குழுவில் இருந்து ஒரு அதிகாரியை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கண்காணிப்பு பணியை முழுநேரமாக ஈடுபட செய்வது அவசியம்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story