டெல்லியில் காற்றின் தரம் சற்று குறைவு


டெல்லியில் காற்றின் தரம் சற்று குறைவு
x
தினத்தந்தி 8 Dec 2021 3:14 AM GMT (Updated: 8 Dec 2021 3:14 AM GMT)

டெல்லியில் காற்றின் தரம் 'மோசம்' என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  டெல்லி நாட்டிலேயே அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. இங்கு அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காற்று மாசு ஏற்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிரமம் நிலவி வருகின்றது.

நேற்று காற்றின் தரமானது 'மிக மோசம்' என்ற பிரிவில் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்து 'மோசம்'(235) என்ற பிரிவுக்கு வந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  தெரிவித்துள்ளது.

காற்று மாசு காரணமாக டெல்லியில் தொடர்ந்து பள்ளிகள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story