டெல்லி: பிபின் ராவத்தின் வீட்டிற்கு சென்ற பாதுகாப்புத்துறை மந்திரி...!
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் வீட்டிற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.
புதுடெல்லி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-17வி5 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் வில்லிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் வீட்டிற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்றார். அங்கு பிபின் ராவத்தின் மகளிடம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த தகவல்களை ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story