பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை


பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 8 Dec 2021 5:42 PM IST (Updated: 8 Dec 2021 5:42 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் தலைமை தளபதியின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுவுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகளுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 

Next Story