தேசிய செய்திகள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை கேப்டன் குறித்த விவரம் வெளியானது... + "||" + Group Captain Varun Singh, Sole Survivor Of Chopper Crash

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை கேப்டன் குறித்த விவரம் வெளியானது...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை கேப்டன் குறித்த விவரம் வெளியானது...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த விமானப்படை கேப்டன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் அவரது மனைவி மிதுலிஹா உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் விமானப்படை கேப்டன் ஒருவர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சௌர்யா சக்கரம் விருந்து வழங்கி கவுரவிக்கப்பட்டவர். இவருக்கு 2020 ஆம் ஆண்டு வானில் அவசர சூழலில் தன்னுடைய தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக விருது வழங்கப்பட்டது’ என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூகவலைதளத்தில் தவறான தகவல் பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து வீடியோ உண்மையா? - செல்போன் தடவியல் ஆய்வு
ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியின் வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
3. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: 6 அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 4 விமானப்படை அதிகாரிகள், 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. பிபின் ராவத் உடலுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி
பிபின் ராவத் உடலுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.
5. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.