முல்லைப்பெரியாறு அணை: நள்ளிரவில் தண்ணீர் திறக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு..!


முல்லைப்பெரியாறு அணை: நள்ளிரவில் தண்ணீர் திறக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு..!
x

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நள்ளிரவில் தண்ணீர் திறக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி, 

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டால் அதில் இருந்து வரும் தண்ணீரால் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும், சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையிலும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி நடந்து கொள்ள கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும். நீர் திறப்பு குறித்து முடிவு செய்ய 2 மாநில அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். அணையில் இருந்து இரவு நேரத்துக்கு பதிலாக பகலில் மட்டுமே தண்ணீரை திறந்துவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story