பிபின் ராவத் மறைவு: “ரஷ்யா ஒரு மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது” - நிகோலாய் குடாஷேவ்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இந்தியாவின் ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இந்தியாவின் ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
“ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிற அதிகாரிகளின் சோகமான மறைவு அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்தியா தனது சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்புள்ள “ஹீரோவை” இழந்துவிட்டது.
“ரஷ்யா ஒரு மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது”அவர் நமது இருதரப்பு சிறப்பு பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறோம். குட்பை, நண்பரே! பிரியாவிடை, தளபதி!”என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story