குடும்ப பொறுப்புகள் மட்டுமல்லாமல்... ராணுவ நல பொறுப்புகளையும் கவனித்த மதுலிகா ராவத்...!


குடும்ப பொறுப்புகள் மட்டுமல்லாமல்... ராணுவ நல பொறுப்புகளையும் கவனித்த மதுலிகா ராவத்...!
x
தினத்தந்தி 9 Dec 2021 9:26 AM IST (Updated: 9 Dec 2021 10:53 AM IST)
t-max-icont-min-icon

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அவரது மனைவியும் பலியானார்.

புதுடெல்லி,

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் குடும்ப பொறுப்புகளை மட்டும் கவனிக்கவில்லை. ராணுவ நல பொறுப்புகளையும் ஏற்று இருந்தார். “ராணுவத்தினரின் மனைவிமார் நல சங்கம்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தலைவராக இருந்து, ராணுவ வீரர்களின் குடும்பத்து பெண்கள் நலனுக்காக பாடுபட்டவர்.

அந்த பெண்களுக்கு அழகுக்கலை, தையல், பின்னல் வேலை, கேக் மற்றும் சாக்லெட் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி ஊக்குவித்தவர். இவர் தலைமை தாங்கிய தொண்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்று ஆகும்.

மேலும் மதுலிகா, ராணுவ வீரர் குடும்பத்து விதவைகள், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு நலஉதவி வழங்குதல் மற்றும் அதுகுறித்த பிரசாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். கணவர் ராணுவத்தை கட்டிக்காக்க, ராணுவத்தினரின் குடும்பங்களை இவர் காத்து வந்தார். தற்போது ராணுவ ஹெலிகாப்டரில் கணவரோடு சேர்ந்து பலியாகி, தனது பெயரையும் ராணுவத்தில் நிலைநிறுத்தி சென்றுவிட்டார்.

Next Story