மராட்டியத்தில் குணமடைந்த முதல் ஒமைக்ரான் நோயாளிக்கு 7 நாள் தனிமை அவசியம்


மராட்டியத்தில் குணமடைந்த முதல் ஒமைக்ரான் நோயாளிக்கு 7 நாள் தனிமை அவசியம்
x

மராட்டியத்தில் குணமடைந்த முதல் ஒமைக்ரான் நோயாளிக்கு 7 நாள் தனிமை படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் விஜய் சூர்யவன்சி கூறியுள்ளார்.

மும்பை,

கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வைரசாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பல்வேறு நாடுகளில் தடம் பதித்துள்ளது. இந்தியாவில் பரவ விடாமல் தடுக்க வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம் கல்யாண் பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 33 வயது பயணிக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டது. அந்த பயணியை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்தநிலையில் அந்த பயணி குணமடைந்ததால், அவர் நேற்று வீடு திரும்பினார். இந்த தகவலை கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கமிஷனர் விஜய் சூர்யவன்சி உறுதிப்படுத்தி உள்ளார்.  மேலும்  7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டார் என்பதை குறிப்பிட்டார். 

Next Story