140 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி கையிருப்பு; மத்திய அரசு தகவல்


140 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி கையிருப்பு; மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2021 12:25 AM IST (Updated: 10 Dec 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

140 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.


புதுடெல்லி,

நாட்டில் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு (இலவச அடிப்படையில்) மற்றும் நேரடி மாநில கொள்முதல் பிரிவு வழியாக இதுவரை 
140 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

இதன்படி, 1,40,01,00,230 டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 19 கோடிகளுக்கும் கூடுதலான (19,08,75,946) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன என்றும் அரசு தெரிவித்து உள்ளது.


Next Story