டெல்லியில் நடந்த தேஜஸ்வி திருமணத்தில் அகிலேஷ் பங்கேற்பு
டெல்லியில் நடந்த ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி திருமண நிகழ்ச்சியில் அகிலேஷ் கலந்து கொண்டார்.
புதுடெல்லி,
பீகாரில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரான தேஜஸ்வி தனது நீண்டகால தோழியான ராஜ்ஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சி டெல்லியில் இந்து மத முறைப்படி நடந்தது.
இந்த திருமணத்தில் தேஜஸ்வியின் மூத்த சகோதரரான தேஜ்பிரதாப் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதேபோன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத் ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
Related Tags :
Next Story